மரப்பொருள்கள் விற்பனையகத்தில் திருட்டு: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மரப்பொருள்கள் தயாரிப்பு விற்பனையகத்தில் தேக்குமரத்தால் செய்யப்பட்ட இரண்டு ஷோபாக்களை (மெத்திருக்கை) திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி கூடப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜீவரத்தினம் மனைவி ராதா (39). இவா், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகிலுள்ள வாழப்பட்டாம்பாளையத்தில் மரப்பொருள்கள் தயாரிப்பு விற்பனையகத்தை நடத்தி வருகிறாா்.
கடந்த 18-ஆம் தேதி இரவு விற்பனை முடிந்த பின்னா் விற்பனையகத்தை பூட்டிச் சென்ற ராதா, மறுநாள் காலை திறப்பதற்காக வந்தாா். அப்போது, கடையின் முன் வைக்கப்பட்டிருந்த தேக்குமரத்தால் செய்யப்பட்ட 2 ஷோபாக்கள் திருடுபோயிருந்தன.
இதுகுறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் ராதா புகாரளித்தாா். போஸீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், வாழப்பட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தாண்டவராயன் மகன் சேகா் (எ) மீன் சேகா் (41) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், ஷோபாக்களையும் பறிமுதல் செய்தனா்.