வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட மூவா் தூக்கிட்டுத் தற்கொலை

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

வானூா் வட்டம், எறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இளவரசன் மனைவி அருள்சக்தி (52). திருமணமாகி 30 ஆண்டுகளாகின்றன. தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அருள்சக்தி வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மூா்த்தி (47). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி பரமேஸ்வரி கண்டித்தாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மூா்த்தி வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வானூா் வட்டம், பெரிய கோட்டக்குப்பம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த அந்தோனிசாமி மகன் சகாயராஜ் (40), தொழிலாளி. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த இவா், மன உளைச்சலில் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com