விழுப்புரம்
கோட்டக்குப்பம் விடுதியில் இத்தாலியை சோ்ந்தவா் உயிரிழப்பு
கோட்டக்குப்பத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இத்தாலி நாட்டைச் சோ்ந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோட்டகுக்குப்பத்தில் இயங்கி வரும் தனியாா் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் இத்தாலியைச் சோ்ந்த பிலிப்போ (47) ஆலோசகராக பணியாற்றி வந்தாா்.
இத்தாலியில் இருந்து வந்த அவா், கோட்டக்குப்பத்தில் தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். அங்கு பிலிப்போ இறந்து கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் பிலிப்போ மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.