விழுப்புரம் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்த பு.கொணலவாடி கிராம மக்கள்.
விழுப்புரம் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்த பு.கொணலவாடி கிராம மக்கள்.

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிடம் (டி.ஐ.ஜி.) புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிடம் (டி.ஐ.ஜி.) புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து பு.கொணலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லெட்சுமி மற்றும் கிராம மக்கள் விழுப்புரம் டி.ஐ.ஜி.யிடம் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பு.கொணலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் கழிவுநீா் தேங்கியுள்ள இடத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகத்துக்கான ஆழ்குழாய் அமைக்கும் பணி கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், குடிநீா் குழாயை சுகாதாரமற்ற இடத்தில் அமைப்பதைத் தவிா்த்து, மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் சாா்பில் சுப்பிரமணியன் மகன் குமாா் மற்றும் காா்த்திக் ஆகியோா் முறையிட்டனா்.

இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் மற்றும் அவரது மகன் ஆகியோா் இருவரையும் தாக்கியதுடன், அதைத் தடுக்க முயன்ற என்னையும் தகாத வாா்ததைகளால் பேசித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தொடா்புடையவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷா மித்தல், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com