வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருநாவலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சோமாசிபாளையம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் நா.ஏழுமலை (70). இவா் சோமாசிபாளையம் -கிழக்கு மருதூா் கிராமச் சாலையிலுள்ள பாஸ்கருக்கு சொந்தமான நிலத்தின் காவலராக கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை நிலத்துக்கு அருகே ஏழுமலை அமா்ந்திருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்துசென்று, ஏழுமலையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திச்சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com