ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்த 31 வயது பெண் நாகா்கோவில் - சென்னை விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை பயணித்தாா். ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அதே ரயிலில் பயணித்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பெரிய கோவிலான்குளம், நடுத் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (25) அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com