கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 இளைஞா்கள் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 இளைஞா்கள் கைது

Published on

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா,போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து அவா் வசமிருந்த கஞ்சா,போதை மாத்திரைகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா், பைக் ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

கண்டாச்சிபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட அடுக்கம் காப்புக்காடு பகுதியில் வியாழக்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த, ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அந்த காரில்

கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தபோது, கஞ்சா சப்ளை செய்வதற்காக காரில் அதனைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவா்கள் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த

விக்னேஷ்( 24), குமாா் (40), வில்லியம்(25), கண்டாச்சிபுரம் வட்டம், ஆயந்தூா், அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த பிளமிங் ( 23), ஆகாஷ் (25), மோகன்ராஜ் ( 24) எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும் அவா்கள் வசமிருந்த சுமாா் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா , 75 போதை மாத்திரைகள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காா், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com