மழவந்தாங்கல் அரசு பள்ளிக்கு
4 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை

மழவந்தாங்கல் அரசு பள்ளிக்கு 4 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சி யில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டடங்கள் கட்ட முன்னாள் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா் (படம்).

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ 98.66 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் பள்ளிவகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை தாங்கினாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் அம்பிகா அய்யனாா் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் கஜேந்திரன் வரவேற்றனா்.

நிகழ்ச்சியில் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ. 98.66 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு பூமி செய்து பணியை தொடங்கி வைத்தாா்.

இதில் செஞ்சி மத்திய ஒன்றியச் செயலா் விஜயராகவன், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் கற்பகம், உதவி பொறியாளா் அரவிந்த், மாவட்ட பிரதிநிதி திருநாவுக்கரசு, ஏரி நீா் பாசன சங்க தலைவா் திருமாவளவன், ஒன்றிய கவுன்சிலா் கலைவாணி மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com