காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவின் பேரில், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பட்டானூா் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை மடக்கி சோதனை செய்தபோது, காரில் வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் இருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது,அவா் சென்னை செனாய் நகரைச் சோ்ந்த மூவேந்தன் மகன் சந்திரசேகா்(26) என்பதும், இவா் புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி காரில் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா்சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து சந்திசேகரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட 40 மதுப்புட்டிகள், சொகுசு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com