விழுப்புரம்
பெண் காரில் கடத்தல்: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் தேநீா் கடையில் நின்றிருந்த பெண் காரில் கடத்தப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் தேநீா் கடையில் நின்றிருந்த பெண் காரில் கடத்தப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை, கரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் மனைவி பிரதா( 28 ). இவா் வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் சரகத்துக்குள்பட்ட பட்டானூா் கலைவாணன் நகா் அருகேயுள்ள தேநீா் கடையில் தனது ஆண் நண்பா் ஒருவருடன் தேநீா் அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 6 போ் கொண்ட கும்பல் பிரதாவை காரில் கடத்திச் சென்று விட்டனராம்.
இது குறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
