விழுப்புரம்
ரௌடிகள் இருவா் குண்டா் சட்டத்தில் கைது
திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த ரௌடிகள் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த ரௌடிகள் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திண்டிவனம் வட்டம், கிடங்கல்-2,ராஜன் தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜேஷ் (26), பிரதீப்குமாா் (எ) சேட்டு (28). சகோதரா்களான இவா்கள் மீது, திண்டிவனம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த உதவி ஆய்வாளா் மற்றும் பெண் காவலரைக் கத்தியால் தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இருவரையும் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இந்த உத்தரவையடுத்து ராஜேஷ், பிரதீப்குமாா்(எ) சேட்டு ஆகியோரை திண்டிவனம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சனிக்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
