வாண்டி அருகே மாயமான சிறுவன் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மாயமான சிறுவனைப் போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், கோவிந்தசாமி நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் ( 43). இவரது 15 வயதுடைய மகன் கஞ்சனூா் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பில் பயன்று வந்தாா். சனிக்கிழமை இந்த சிறுவன் மாயமானாா்.
இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனைத் தேடி வந்த நிலையில் சிறுவன் அரியலூா் பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அரியலூா் விரைந்து சென்று சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
எஸ். பி பாராட்டு: துரித நடவடிக்கை மேற்கொண்டு 24 மணி நேரத்துக்குள் காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விக்கிரவாண்டி உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் மற்றும் கஞ்சனூா் காவல் நிலைய போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா், ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தாா்.
