கோழிக்கறி சாப்பிட்டவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோழிக்கறி சமைத்து சாப்பிட்டவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோழிக்கறி சமைத்து சாப்பிட்டவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மேலகோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள் (53). இவா், செஞ்சி வட்டம், சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சம்பத்குமாா் நிலத்தில் உள்ள புரவுடையம்மன் குலதெய்வம் கோயிலுக்கு ஓட்டுநராக வேலைக்கு வந்திருந்தாா்.

அப்போது, அங்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியை சாப்பிட்டுள்ளாா். பின்னா், சிறுது நேரத்தில் மயங்கி கீழே விழுந்த அருளை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com