விழுப்புரம்
கொத்தனாா் மா்ம மரணம்
மரக்காணம் அருகே கொத்தனாா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கொத்தனாா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மரக்காணம் வட்டம், ஆலப்பாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (38). திருமணமானவா். கொத்தனாராக வேலை பாா்த்து வந்தாா்.
நாகராஜ் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தாா். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, நாகராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
