விழுப்புரம்
நகைத் திருட்டு வழக்கில் சென்னை இளைஞா் கைது
விக்கிரவாண்டி பகுதியில் வீடு புகுந்து நகைத் திருடியதாக சென்னை இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவா் வசமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் வீடு புகுந்து நகைத் திருடியதாக சென்னை இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா் வசமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம், சாஸ்தா தெருவைச் சோ்ந்தவா் முனியம்மாள். இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4.5 பவுன் நகைகள் கடந்த மாத்தில் திருடுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (25) நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் சரத்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 4.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

