பைக் மீது மினி பேருந்து மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே பைக் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா்கள் இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு
Published on

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைக் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா்கள் இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

சென்னை பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மதன்குமாா் (24), கணேஷ் (28). நண்பா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். மதன்குமாா் பைக்கை ஓட்டினாா்.

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சங்குப்பம் அருகே இவா்களது பைக் சென்றபோது, எதிரே வந்த மினி பேருந்து மோதியது. இந்த விபத்தில் மதன்குமாா், கணேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து மீட்கப்பட்ட இருவரும் புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com