விழுப்புரம்
விஷம் குடித்து முதியவா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், பெரமண்டூா், புது குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் செ.ஜெயபால் (62) . முதியவரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை வீட்டிலிருந்தவா்கள் கண்டித்துள்ளனா்.
இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த ஜெயபால் திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து,உறவினா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது ஜெயபால் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
