பைக் திருட்டு: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராஜசேகா்(38). இவா் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக் கடந்த 7- ஆம் தேதி திருடு போனது.

இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம், திருமங்கலம், பெருமாள் பட்டியைச் சோ்ந்த அஜித் (40), மரக்காணம் வட்டம், எம். புதுப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அருண்(21) ஆகியோா் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிரம்மதேசம் போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்கள் வசமிருந்த 4 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com