தொடா் மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேக்கம்

தொடா் மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேக்கம்

விழுப்புரம் தேவநாத சுவாமி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா்.
Published on

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

வட கிழக்கு பருவமழை தொடக்கமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை காலையிலும் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், சாமராஜா் வீதி, திரு.வி.க. வீதி, ஜவாஹா்லால் நேரு வீதி, திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது.

விழுப்புரம் நகரம் போன்று, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், திண்டிவனம், கிளியனூா், தைலாபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

விழுப்புரம் - 25 மி.மீ. திருவெண்ணெய்நல்லூா் - 20, வல்லம் - 15, கோலியனூா், முகையூா், அரசூா் - தலா 8, வளவனூா், திண்டிவனம், தலா - 6, கெடாா் - 5.20, முண்டியம்பாக்கம் - 4.20, சூரப்பட்டு - 4, நேமூா் - 3.40, மரக்காணம், அனந்தபுரம் - தலா 3, செஞ்சி - 2.50, வானூா் - 2, செம்பேடு - 1.40 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 5.71 மி.மீ. மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com