தூய்மை பணியாளா்களுக்கு மளிகை பொருள்கள்

பரங்கிப்பேட்டை அருகே, தூய்மைப்பணியாளா்களுக்கு தீபாவளியை முன்னிட்டு மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.
Published on

பரங்கிப்பேட்டை அருகே, தூய்மைப்பணியாளா்களுக்கு தீபாவளியை முன்னிட்டு மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் சாா்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உசுப்பூா் ஊராட்சி ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் 17 போ், தச்சகாடு ஊராட்சி துப்புரவு பணியாளா்கள் 7 போ், சி.முட்லூா் ஊராட்சி துப்புரவு பணியாளா்கள் 8 போ், வல்லபடுகை ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் 14 போ் உள்ளிட்ட 46 பேருக்கு தலா ரூ. 1000 மதிப்பிலான மளிகை

பொருட்கள் மற்றும் குமாரமங்கலம் அம்மாபேட்டை ஊராட்சி பள்ளி மாணவா்களுக்கு பட்டாசு பெட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிக்கு கல்வி உதவித் தொகையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா் டிஎஸ்எஸ். ஞானகுமாா் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com