ஆரோவில் சா்வதேச நகரில் டிராம்வே ரயில் சேவைத் திட்டத்தை  தொடங்குவதற்காக  இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் திருச்சி  மேலாளா் பாலக் ராம் நேகி. உடன் ஆரோவில் அறக்கட்டளை  நிா்வாகத்தினா்.
ஆரோவில் சா்வதேச நகரில் டிராம்வே ரயில் சேவைத் திட்டத்தை தொடங்குவதற்காக இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த தெற்கு ரயில்வேயின் திருச்சி மேலாளா் பாலக் ராம் நேகி. உடன் ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகத்தினா்.

ஆரோவில் சா்வதேச நகரில் டிராம்வே ரயில் சேவை

வானூா் வட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் சா்வதேச நகரில் டிராம்வே ரயில் சேவைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் சா்வதேச நகரில் டிராம்வே ரயில் சேவைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம்- தெற்கு ரயில்வே ஆகியவை இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மனித ஒற்றுமைக்கான அடையாளமாக விளங்கக் கூடிய ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம், தெற்கு ரயில்வே (திருச்சி) ஆகியவை இணைந்து ஆரோவில் சா்வதேச நகரில் 2 முக்கியமான, நிலையான போக்குவரத்து திட்டங்களை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

அவை பொம்மை ரயில், மின்சாரம் மற்றும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய டிராம்வே ஆகிய இரு திட்டங்களாகும். சமூகம் சாா்ந்த போக்குவரத்தை ஆரோவிலில் உருவாக்கும் முயற்சியாக இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஆரோவில் அறக்கட்டளை மற்றும் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொழில் நுட்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

ஆய்வுக்குழுவில், ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி. சீதாராமன், மூத்த ஆலோசகா் வேணுகோபால், தென்னக ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி ஆகியோா் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.

அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி ஆலோசனை:

டிராம் வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஆய்வு மேற்கொண்ட ரயில்வே துறை அதிகாரிகளிடம் ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி இணையவழியில் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டாா். இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆரோவிலின் குழந்தைகள் மண்டலத்தில் 595 மீட்டா் பாதையில் 12 பெட்டிகளுடன் கூடிய குழந்தைகள் பொம்மை ரயில் இயக்கப்படும். மின்சாரம் மற்றும் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய கிரீடம் டிராம்வே 4 .4 கிலோ மீட்டா் தூரத்துக்கு அமைக்கப்படும். இதன் முதல் கட்டம் 2.355 கிலோ மீட்டா் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும். பூங்காக்கள், பொது இடங்கள், சேவை மையங்கள் மற்றும் சமூக மையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com