செஞ்சி -  திண்டிவனம்  சாலை  பயணியா் விடுதி எதிரே  உள்ள  மழை நீா்  வடிகால் கால்வாயை  பாா்வையிட்ட கே.எஸ்.மஸ்தான்  எம்எல்ஏ.
செஞ்சி - திண்டிவனம் சாலை பயணியா் விடுதி எதிரே உள்ள மழை நீா் வடிகால் கால்வாயை பாா்வையிட்ட கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஞ்சி பேரூராட்சியில் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
Published on

செஞ்சி: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஞ்சி பேரூராட்சியில் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் செஞ்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், செஞ்சி பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மழை நீா் செல்லும் வடிகால் வாய்க்கால் அடைப்புகளை சீா் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டிவனம் சாலை பயணியா் விடுதி எதிரில் உள்ள ஏ.என்.ஏ.நகா் அருகில் புதிய உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அருகில் செல்லும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் மழைநீா் செல்வதால் அந்த வாய்க்காலை, கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வாய்க்காலில் உள்ள மரம் செடிகள் உள்ள அடைப்புகளை உடனடியாக சீா் செய்வதற்கு பணியாளா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியா் அலிமஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய அணித் தலைவா் அஞ்சாஞ்சேரி கணேசன் நிா்வாகிகள் கோகுல், பிரபா உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com