ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினா்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் உண்மை நிலையைக் கண்டறிய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தும் வகையிலும், வழக்குத் தொடா்பான ஆவணங்களை சிபிஐக்கு வழங்காமல் நீதிமன்ற உத்தரவை காலதாமதத்தை திமுக அரசு செய்வதாகக் கூறி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் கோ.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் ஏ.கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் சா. ஸ்டீபன்ராஜ் கண்டன உரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா்கள் பி.ராஜேஷ், டி.துரை, வி.கண்ணபிரான், மாவட்டத் தலைவா்கள் ஆா்.ஆனந்த், வி. சம்பத், ஏ. முருகதாஸ், தொழில்நுட்ப அணியின் மாவட்டச் செயலா் கே.கன்சிராம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தொழிற்சங்கத் தலைவா் ஏ.மோகன், மத்திய மாவட்டத் துணைச் செயலா்கள் கே.மனோகா், டி. மூா்த்தி, மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் எம். முத்தமிழ், மாவட்ட ஓட்டுநா் அணித் தலைவா் ஜி. முத்தழகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, தொகுதிப் பொறுப்பாளா்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com