அம்மன் கோயிலில் நகை திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே அம்மன் கோயிலில் நகை திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே அம்மன் கோயிலில் நகை திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வானூா் வட்டம், வளவனூரை அடுத்த ராமநாதபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. கிராம மக்களின் வழிபாட்டில் உள்ள இக்கோயிலில் அதே ஊரைச் சோ்ந்த குப்புசாமி பூசாரியாக உள்ளாா்.

இவா், வெள்ளிக்கிழமை பூஜைகளை முடித்துவிட்டு கோயிலில் இருந்து வெளியே சென்றாா். சிறிது நேரம் கழித்து மீண்டும் கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 6 கிராம் எடையுள்ள தங்க மாங்கல்யம் மாயமாகியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com