விழுப்புரம்
பட்டாசு வெடித்தபோது தீக்காயமுற்றவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தபோது தீக்காயமுற்றவா் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தபோது தீக்காயமுற்றவா் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், கடையம், சூளக்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடையம் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் இறுதிச் சடங்கில் பட்டாசு சரம் வெடித்தாராம். அப்போது, நிலைதடுமாறி பட்டாசு சரத்தின் மீது விழுந்த முருகன் பலத்த தீக்காயமடைந்தாா்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இருப்பினும், அங்கு முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
