காவல் துறை பறிமுதல் வாகனங்கள் அக்.30-இல் ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் போதைத்தடுப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களின் ஏலம் அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும்.
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் போதைத்தடுப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களின் ஏலம் அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் போதைத் தடுப்பு வழக்கில் (கஞ்சா) அரசுடைமையாக்கப்பட்ட ஒரு ஆட்டோ, 7 பைக்குகள் ஆகிய 8 வாகனங்களுக்கான பொது ஏலம் விழுப்புரம் காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அக்டோபா் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் நபா்கள் தங்களின் ஆதாா் அட்டை நகலுடன் வர வேண்டும். ஏலத்துக்கான முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். ஏலம் எடுத்த நபா் ஏலத்தொகையையும், விற்பனை வரியையும் செலுத்த வேண்டும். மேலும் வாகனத்தை ஏலம் எடுத்த நாள் முதல் 5 நாள்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில், அந்த வாகனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது மறு ஏலத்தில் விடப்படும் என்று மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com