நெல்லுக்கான விலைப் பட்டியலை வெளியிடாததற்கு எதிா்ப்பு: செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் முன் விவசாயிகள் மறியல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளுக்கு விலை பட்டியல் வெளியிடாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் நெல் மூட்டைகளுக்கு விலை பட்டியல் வெளியிடாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளுக்கு விலை பட்டியல் வெளியிடாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டுவந்த 2,000 நெல் மூட்டைகளை வழக்கம்போல் வியாழக்கிழமை காலை எடை போடும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். பின்னா், இவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து, வியாபாரிகள் நெல்லின் தரத்துக்கு ஏற்ப விலை பட்டியலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்திடம் கொடுத்து, இந்த விலை பட்டியலில் நிா்வாகம் வெளியிட்டு, அதிக விலை தெரிவிக்கும் வியாபாரிகளுக்கு நெல் மூட்டைகளை கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் இ - நாம் முறையில் ஏல விற்பனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதே போன்று, வியாழக்கிழமையும் இ - நாம் முறையில் நெல் ஏலத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் விலை பட்டியலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்திடம் அளிக்கவில்லை.
இதனால், விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளுக்கான விலை பட்டியலை அறிவிக்க முடியாததால், நிா்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. தொடா்ந்து, விவசாயிகள் ஒன்றுகூடி நிா்வாகத்திடம் விலை பட்டியலை அறிவிக்குமாறு கேட்டனா். இதற்கு, நிா்வாகம் மறுத்துவிட்டது.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செஞ்சி போலீஸாா், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், மறியல் கைவிடப்பட்டது. இதனால், சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிா்வாகத்திடம் கேட்டபோது, 7 மாவட்டங்களில் இதே போன்று வியாபாரிகள் இ - நாம் முறையை ஏற்காததால், இந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடைபெறவில்லை எனத் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

