Enable Javscript for better performance
ஊழல் தலைவர்களை களமிறக்குகிறது காங்கிரஸ்- Dinamani

சுடச்சுட

    
    arun_jaitley

    ""நேர்மையுடன் நடந்து கொள்வதாக கூறிவரும் காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்களை மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியுள்ளது விந்தையாக இருக்கிறது'' என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது:

    சண்டீகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்.

    ரயில்வே தேர்வு வாரிய முறைகேட்டில் பவன்குமார் பன்சால் மீது குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

    ஆதர்ஷ் ஊழலில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மீது குற்றம் சுமத்த சிபிஐ அந்த மாநில ஆளுநரிடம் அனுமதி கோரியது. ஆனால் அந்த மாநிலத்தில் காங்கிரûஸ காப்பாற்றும் நோக்கில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அசோக் சவாண் போட்டியிடுகிறார். வீரபத்ர சிங் மீதான குற்றச்சாட்டுக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று ஜேட்லி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai