Enable Javscript for better performance
\\\"எனது சகோதரருக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்\\\'- Dinamani

சுடச்சுட

    
    rabri_devi

    பிகார் மாநிலத்தில் சரண் மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் தனது சகோதரர் சாது யாதவை, "விரோதி' என்று முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி சாடினார்.

    சரண் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சாது யாதவ் பற்றி, சரண் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராப்ரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ""விரோதியை நாங்கள் சமாதானப்படுத்தமாட்டோம். மக்கள் அவருக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள்'' என்றார்.

    பாஜகவின் மறைமுக ஆதரவினால்தான் சாது போட்டியிடுகிறார் என்று லாலுவும், ராப்ரியும் கூறிய குற்றச்சாட்டை முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி மறுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai