Enable Javscript for better performance
கட்சி கொடுத்த பணம் கபளீகரம்?- Dinamani

சுடச்சுட

    
    gandhi_money

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீடு, வாசல், சொத்துகளை விற்று செலவு செய்ததெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்தில் அதுபோன்று இல்லாவிட்டாலும் கட்சி கொடுக்கும் பணம் மற்றும் தேர்தல் நிதியாக திரட்டப்பட்ட பணம் முழுவதையும் பெரும்பாலான வேட்பாளர்கள் செலவு செய்துவிடுவது வழக்கம்.

    ஆனால், "தண்ணீரில் வெண்ணெய் எடுக்கும் வேட்பாளர்' என்ற பெயரை பெற்றிருக்கிறார் வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னணி கட்சியின் வேட்பாளர் ஒருவர். பிரசாரம் தொடங்கியது முதல் தேர்தல் செலவுக்கென கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட பணத்தை கையால் கூட தொடவில்லையாம்.

    மாறாக அவர் தினமும் எந்தெந்த வார்டுகளுக்கு செல்கிறாரோ அதற்கான செலவை அந்தந்த கவுன்சிலர்களே செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனராம்.

    இதுகுறித்து வட சென்னையின் கவுன்சிலர்கள் சிலர் கூறியது:

    வேட்பாளருடன் குறைந்தபட்சம் 250 முதல் அதிகபட்சம் 400 பேர் வரை அணிவகுத்துச் சென்றால்தான் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க முடியும். இதற்காக அழைத்து வரப்படும் ஆட்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200, சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இதர செலவுகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் செலவாகிறது.

    இவை தவிர பிரசாரத்தின்போது செல்லும் வாகனங்களின் வாடகை, பட்டாசு, கொடி-தோரணங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட செலவுக்காக ரூ.2.5 லட்சம் வரை தினமும் செலவாகிறது.

    இதற்கு கட்சி கொடுக்கும் பணத்தில் இருந்து செலவு செய்யாமல் அந்த செலவை வார்டு கவுன்சிலர்கள் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

    இதை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களும் கண்டுகொள்வதில்லை என்றனர்.

    அனைத்து செலவுகளையும் கவுன்சிலர்களே செய்தால் வேட்பாளர்களுக்கு என கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட பணம் எங்கே? என்ற கேள்விக்கு அந்த வேட்பாளர்தான் பதில் சொல்ல வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai