Enable Javscript for better performance
கோயிலில் வழிபட்டு பிரசாரம் தொடங்கிய அப்துல் ரஹ்மான்!- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் இருந்து தனது வாக்கு வேட்டையை புதன்கிழமை தொடங்கினார். முன்னதாக பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் திமுக நிர்வாகிகளுடன் சென்று அவர் வழிபாடு நடத்தினார். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள பொங்கேஷியா அவுலியா தர்காவுக்குச் சென்று வழிபாடு நடத்திய அவர் திமுக நிர்வாகிகளுடன் ஜீப்பில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

    பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திமுகவினரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வேட்பாளர் அப்துல் ரஹ்மானும் ஓட்டுக்காக பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்தது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai