Enable Javscript for better performance
தேர்தல்: 10 ஆண்டுகளில் 5 மடங்கு கூடுதல் செலவு- Dinamani

சுடச்சுட

    
    system

    தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 29-இல் தொடங்குகிறது.

    தமிழகத்தில் மட்டும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ரூ. 230 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலை நடத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும். இதற்கு காரணம் என்ன?

    இந்தத் தேர்தலில் 5 கோடி:வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் வைத்து கடந்த காலங்களில் வாக்குப் பதிவையும், வாக்குகளை எண்ணும் பணியையும் மட்டுமே தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால், இப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடிச் சீட்டு, விழிப்புணர்வு பிரசாரங்கள் என தேர்தல் ஆணையம் தன்னை நவீனப்படுத்திக் கொண்டுள்ளது.

    மேலும், வாக்காளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1952-ல் இருந்ததைக் காட்டிலும் இப்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

    இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 1952-ம் ஆண்டில், சென்னை மாகாணத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2.69 கோடியாக இருந்தது. இதன்பின், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் தமிழகத்தில் 1967- ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் சற்று கூடுதலாகவே இருந்தது. 1984-ஆம் ஆண்டில் 3 கோடியாகவும், 1989- ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியாகவும் அதிகரித்து, கடந்த 2009- ஆம் ஆண்டில் 4.16 கோடியாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை இப்போது 5.37 கோடியை எட்டியுள்ளது.

    வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அதனால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை உயர்வும் தேர்தலை நடத்துவதற்கான செலவு உயர்வுக்கு ஒரு காரணம் என்கிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்.

    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு நடவடிக்கைகளை விடியோ படம் எடுப்பது, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது போன்ற காரணங்களும் செலவின் உயர்வுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றார் அவர்.

    வாக்குக்குப் பணம் வாங்கக் கூடாது என்பது குறித்த பிரசாரம் தமிழகம் முழுவதும் செய்யப்படுகிறது.

    இதற்காக சிறிய அளவு நிதி செலவு செய்யப்படுவதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    16-வது மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் நடத்துவதற்கு ரூ. 230 கோடியாகும் என மதிப்பிட்டுள்ள நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலை நடத்த ரூ. 78 கோடி வரை மட்டுமே செலவாகியுள்ளது. அதற்கு முந்தைய தேர்தல்களில் ரூ. 50 கோடிக்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai