Enable Javscript for better performance
நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்!- Dinamani

சுடச்சுட

    
    karuppasamypandian

    திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளை திமுக புறக்கணிப்பதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் பேசியது:

    எதிர்க்கட்சிக்காரர்களும் என்னிடத்தில் வந்து ஏதேனும் உதவிகள் கேட்டால் அதை தட்டிக்கழிக்காமல் செய்து தருவதுதான் எனது கொள்கை. நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன். நெஞ்சில் குத்துவதைக்கூட ஏற்றுக்கொள்வேன். முதுகில் குத்துவதை ஏற்க முடியாது. துரோகிகளை மன்னிக்க முடியாது.

    எனவே கூட்டணி கட்சியினர், திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    கூட்டணிக் கட்சிகள் தங்களது தேவையைக் கேட்டுப் பெற வேண்டும்.

    தேர்தல் பணிக்காக நாடாளுமன்றத் தொகுதிக் குழு, சட்டப் பேரவைத் தொகுதிக் குழு, பகுதிக் குழு, பூத் கமிட்டி என்ற அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு குழுவினரும் தங்களது பணியை சிறப்பாக செய்திட வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai