Enable Javscript for better performance
நாங்கள் இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது- Dinamani

சுடச்சுட

    
    mamta

    மக்களவைத் தேர்தலையடுத்து மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், அக்கட்சியின் ஆதரவின்றி எவராலும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரருமான பாய்ச்சங் பூட்டியாவை ஆதரித்து புதன்கிழமை அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தில்லியிலிருந்து வரும் நபர்கள் (பாஜக வேட்பாளர் அலுவாலியா), வெற்றி பெற்ற பிறகு மீண்டும் தில்லிக்கே சென்று அங்கேயே இருந்துவிடுவார்கள். டார்ஜிலிங்கை அவர்கள் கருத்தில் கொள்ளப்போவதில்லை. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக மற்றும் காங்கிரஸýக்கு ஆதரவாக எதுவும் நிகழப்போவதில்லை. இங்கு கிடைக்கும் பேராதரவுடன், மத்தியில் ஆட்சி அமைப்பதில் திரிணமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

    மத்திய அரசு டார்ஜிலிங்கிற்காக எதுவும் செய்யவில்லை. அதற்கான சிறப்புச் சலுகைகள் வழங்குமாறு திரிணமூல் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம் என்று குற்றம் சாட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai