Enable Javscript for better performance
வறுமையில் தவிக்கும் தொகுதியில் 2 கோடீஸ்வரர்கள் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    வறுமையில் தவிக்கும் தொகுதியில் 2 கோடீஸ்வரர்கள் போட்டி

    By dn  |   Published on : 27th March 2014 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒடிஸா மாநிலத்தில் வறுமையின் பிடியில் தவிக்கும் கந்தமால் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் 2 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    ஒடிஸா மாநிலம் கந்தமால் மக்களவைத் தொகுதி, கந்தமால், கஞ்சம், பெüத், நயாகர் ஆகிய 4 மாவட்டங்களைக் கொண்ட பகுதியாகும்.

    பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தத் தொகுதியில், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்பட 6 கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில், பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் ஹேமேந்திர சந்திரா சிங்கின் சொத்து மதிப்பு ரூ. 48.72 கோடியாகும்.

    ஹேமேந்திர சந்திரா சிங் சுமார் ரூ. 23.85 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக் கடிகாரங்களை வைத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹரிஹர் கரண், தனது சொத்து மதிப்பு ரூ. 9.62 கோடி என்று தெரிவித்துள்ளார். இதில், அசையும் சொத்து மதிப்பு ரூ. 1.37 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ. 6.07 கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கந்தமால் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ.10 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai