Enable Javscript for better performance
ஷிண்டேவின் குடும்பச்சொத்து ரூ.21 கோடி- Dinamani

சுடச்சுட

    
    shinde

    மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தனது குடும்பத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்து மதிப்பாக ரூ.21.06 கோடி என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது மனைவி உஜ்வாலாவின் அசையா சொத்து மதிப்பு ரூ.9.08 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், ஷிண்டேவுக்கு ரூ.1.5 லட்சம் கடன் இருப்பதாகவும், இருவருக்கும் சேர்த்து ரூ.6.18 கோடிக்கு அசையும் சொத்து இருப்பதாகவும், ஷிண்டேவின் மனைவிக்கு ரூ.7.3 லட்சம் மதிப்பிலான டெம்போ இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவை தவிர ரூ.4.7 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான டொயோடா சொகுசு கார் ஒன்றை இந்தாண்டு வாங்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டப்படிப்பு முடித்துள்ள ஷிண்டே, சமூக சேவை மற்றும் விவசாயத்தின் மூலம் இவற்றை சுயமாக சம்பாதித்ததாக கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai