இது 'கலை’யரின் 'கலை’நயம்
By | Published On : 30th August 2013 12:58 PM | Last Updated : 31st August 2013 01:23 PM | அ+அ அ- |

மணி மேக் ’கலை’ அவரிடம் ஏராளம் என்பதை அறிந்த காரணத்தாலே....
அந்தக் கலையில் சிறந்த அவரிடம் அள்ளக் அள்ளக் குறையாத அந்த அட்சய பாத்திரம் உண்டென்ற காரணத்தாலே...
வெட்டிப் பிரித்தும் உதறித் தள்ளியும்கூட...
விட்டுப் பிரிந்த நட்பை போக்’கலை’
இலங்கை என்ற இலக்கை கோக்’கலை’
சமரசம் என்ற சடங்கை விடுக்’கலை’
பார்லிமெண்ட் சீட் என்ற பட்டியலை பார்க்’கலை’
சந்தடிசாக்கில் கர்நாடக அரசியலாரை கைக்குள் சேர்க்’கலை’
இன்னும் அதற்காக
நிற்’கலை’
விற்’கலை’
சிக்’கலை’
அவிழ்க்’கலை’!
இக்’கலை’
அக்’கலை’
தொடுக்’கலை’
துவங்’கலை’
எக்’கலை’
வைக்’கலை’
திக்’கலை’ திணறலை என்பதாலே...
’கலை’ப் பெயர் சூட்டினார் ’அந்நா’ளில் என்பதை ’கலை’மணிகள் உணர்ந்து பாருங்கள்!