சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் எம்.பி.ஏ.,வில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
இதில், நிகழாண்டு எம்.பி.ஏ. மாணவர்கள் மட்டும் (பதிவு எண்: ஏ12,ஏ13,ஏ14) தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு கட்டணமாக தாள் ஒன்றுக்கு ரூ.750 செலுத்த வேண்டும். இதற்கு www.iedunom.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்.பி.ஏ தேர்வு முடிவுகளை அறிய....
</p>