இருபத்தியோறு வயதுக்கு குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது: அன்புமணி

இருபத்தியோறு வயதுக்கு குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது என்றும், அதனால் பாமக திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்று பாமக முதலமைச்சர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இருபத்தியோறு வயதுக்கு குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது: அன்புமணி

இருபத்தியோறு வயதுக்கு குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது என்றும், அதனால் பாமக திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்று பாமக முதலமைச்சர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

 உங்கள் ஊர், உங்கள் அன்புமணி என்ற பெயரில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மத்தியிலும், அவர்களின் கேள்விக்கும் பதில் அளித்து பேசியது:

 தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை எங்களால்தான் கொடுக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். அரசு மூலம் அளிக்கும் சான்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரத்தில் பட்டு பூங்கா அமைத்து பட்டுத் தொழிலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

 அப்போது ஒரு இளைஞர் எழுந்து காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் சாதி மறுத்துதானே திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர் தங்களை சாதியற்றவர்களாக அறிவித்துக் கொள்ளலாம் அல்லவா எதற்காக சாதிரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ஏற்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதில் அளித்த அன்புமணி பாமகவை பலர் காதலுக்கு எதிரான கட்சியாகவும், தலித் மக்களுக்கு எதிரானவர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைவரும் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். எனது தலைமையில் எத்தனையோ காதல் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

 ஆனால் பள்ளி படிப்பு மட்டுமே முடித்துள்ள ஒரு 18 வயது பெண்ணை நான் குழந்தையாகவே பார்க்கிறேன். ஏற்கனவே நமது சமூகத்தில் திருமண வயது 13 ஆக இருந்தது. அப்புறம் 15 ஆக இருந்தது. தற்போது 18 வயதுக்கு மேல் திருமணம் என்று உள்ளது. ஆனால் மனநல மருத்துவர்கள் உள்பட பலர் ஒரு பெண் திருமணத்துக்கு 21 வயது ஆகும்போதுதான் முழுமையாக தகுதியை அடைவதாக கூறுகின்றனர். சிங்கப்பூரில் திருமண வயது 21 ஆக உள்ளது. எனவேதான் நாங்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

 இதே இளைஞர் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை கைவிட்டு பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைவருக்கும் இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சிர்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு இந்திய அரசியல் சாசனத்தில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டுக்கு இடமில்லை. சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால் நாங்கள் அனைத்து சமுதாய மக்களுக்குக்கும் அவர்களின் விகித்தார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சிப்போம் என்றார்.

 நூலகர் ஒருவர் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதுபோல் சட்டம் இயற்ற முடியாது. ஆனால் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அவர்களின் விருப்பத்துடன் அரசுப் பள்ளிகளில் படிக்கும் முன்னுதாரணத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றார்.

 மதுவை ஒழிப்பது, ஊழலை ஒழிப்பது, பொதுமக்கலுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவது, நீர் மேலாண்மையை பாதுகாப்பது, தடுப்பணைகளை கட்டுவது உள்பட பல்வேறு கருத்துக்களை அன்புமணி ராமதாஸ் தனது கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com