Enable Javscript for better performance
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3.65 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3.65 லட்சம் பறிமுதல்

    Published on : 15th April 2016 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதிக்கு உள்பட்ட பி.என்.பட்டி பேரூராட்சி  18-ஆவது வார்டு அ.தி.மு.க., கிளை செயலராக இருப்பவர் அன்பழகன். இவர் வீட்டுக்கு பக்கத்திலேயே மளிகை கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு அன்பழகன் வீட்டிலிருந்து அதிமுக கட்சியினருக்கு தேர்தல் செலவுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மேட்டூர் தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் நேற்று, இரவு அன்பழகன் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, வீட்டு பீரோவில் ரொக்க பணம், 3 லட்சத்து, 65 ஆயிரத்து, 650 ரூபாய் இருந்தது. அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மேட்டூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மேகநாத ரெட்டியிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai