Enable Javscript for better performance
இலங்கையால் பிடிக்கப்பட்ட படகுகள் திரும்பப் பெறப்படும்: ஜெயலலிதா உத்தரவாதம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கையால் பிடிக்கப்பட்ட படகுகள் திரும்பப் பெறப்படும்: ஜெயலலிதா உத்தரவாதம்

    Published on : 15th April 2016 05:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya fish

    அருப்புக்கோட்டை: இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    பாக் நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்னை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்படுகிறது.

    மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து தூதரக அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தி மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவது மீனவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

    ஆனால், முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி, மீனவர்கள் பேராசையினால் தான்கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்கின்றனர் என்று மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். பேராசையினால் தான் மீனவர்கள் அந்த எல்லையைத் தாண்டி செல்கின்றனர் என்று கருணாநிதி பேசி இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தாலும், இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி படகுகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai