Enable Javscript for better performance
ஏப். 16-ல் சென்னையில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 16-ல் சென்னையில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ

    By DN  |   Published on : 15th April 2016 09:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko

    சென்னை

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வருகிற 16 ஆம் தேதி சென்னையிலிருந்து தனது முதல் கட்ட பிரசாரத்தைத் தொடக்குகிறார்.

    இதுதொடர்பாக மதிமுக வெளியிட்ட அறிக்கை:

    தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளருமான வைகோ சனிக்கிழமை (ஏப். 16) காலை 10.00 மணிக்கு, சென்னை அண்ணா நகர் -எம்.ஜி.ஆர். காலனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

    இதைத்தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி வரை தமிழக முழுவதும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் விவரம்:

    ஏப்ரல் 16: அண்ணா நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு வி.க.நகர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், ஆர்.கே. நகர்

    ஏப்ரல் 17: ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மேற்கு,  திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு

    ஏப்ரல் 18: விளவன்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி

    ஏப்ரல் 19: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி,  ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை

    ஏப்ரல் 20: விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி

    ஏப்ரல் 21: இராசபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர்

    ஏப்ரல் 22: சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி

    ஏப்ரல் 23: ஜெயங்கொண்டம், அரியலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருச்சி  கிழக்கு

    ஏப்ரல் 24: அரவக்குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக்கடவு

    ஏப்ரல் 25: கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு

    ஏப்ரல் 26: உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மயிலம், திண்டிவனம், செஞ்சி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai