Enable Javscript for better performance
ஜெயலலிதாவை எதிர்த்து விசிக; கருணாநிதிக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட்- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதாவை எதிர்த்து விசிக; கருணாநிதிக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட்

    By சென்னை,  |   Published on : 15th April 2016 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளன.
     தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக என 6 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாகச் செயல்பட்டு வருகின்றன.
     தேமுதிக 104 தொகுதிகளிலும் மதிமுக 29 தொகுதிகளும், தமாகா 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
     ஜெயலலிதாவை எதிர்த்து விசிக: அந்தப் பட்டியலின்படி ஆர்.கே.நகரில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை நிறுத்த உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் 6 கட்சிகளுமே போட்டியிட விரும்பின. கடைசியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கூறினர்.
     திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். இந்தத் தொகுதியிலும் 6 கட்சிகளும் போட்டியிட விரும்பியதாக அதன் தலைவர்கள் கூறினர்.
     ஸ்டாலினை எதிர்த்து தேமுதிக: கொளத்தூரில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தேமுதிக போட்டியிட உள்ளது. தேமுதிக உடைந்து மக்கள் தேமுதிக உருவாகியுள்ளது. இதனை மு.க.ஸ்டாலின்தான் செய்ததாக தேமுதிக குற்றம்சாட்டி வருகிறது. இதனால் கொளத்தூர் தொகுதியைத் தேமுதிக கேட்டுப் பெற்றுள்ளது.
     3 இடங்களில் தேமுதிக - ம.தேமுதிக: தேமுதிகவிலிருந்து பிரிந்து மக்கள் தேமுதிகவைத் தொடங்கியுள்ள வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கிலும், சி.எச்.சேகர் கும்மிடிப்பூண்டியிலும், எஸ்.ஆர்.பார்த்திபன் மேட்டூரிலும் போட்டியிடுகின்றனர். இந்த 3 தொகுதிகளிலும் தேமுதிகவே வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
     திமுக - மதிமுக நேரடிப் போட்டி: இந்தத் தேர்தலில் மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திமுக - மதிமுக இடையே 24 தொகுதிகளில் நேரடிப் போட்டி நடைபெற உள்ளது.
     காங்கிரஸ் - தமாகா போட்டி: காங்கிரஸிலிருந்து பிரிந்து தமாகா செயல்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் ராயபுரம், மயிலாப்பூர், சங்ககிரி, நாமக்கல், முசிறி, பாபநாசம், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கிள்ளியூர் ஆகிய 9 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றன.
     பொதுத் தொகுதியில் விசிக: கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தபோது பொதுத் தொகுதியை ஒதுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டு வந்தது. ஆனால், ஒதுக்கப்பட்டது இல்லை. இந்தத் தேர்தலில் 25 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. இதில் 17 தனி தொகுதிகளிலும் 8 பொது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai