Enable Javscript for better performance
திமுகவில் தொடரும் போராட்டம்: ஜோலார்பேட்டை வேட்பாளரை மாற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திமுகவில் தொடரும் போராட்டம்: ஜோலார்பேட்டை வேட்பாளரை மாற்ற கோரிக்கை

    By dn  |   Published on : 15th April 2016 03:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மகளிர் அணி வேலூர் (மே) மாவட்ட தலைவி கவிதா தண்டபாணியை திமுக தலைமை அறிவித்தது.

    இந்நிலையில் மாற்று தொகுதியை சேர்ந்த வேட்பாளரை  ஏற்க முடியாது  எனக்கூறி 100  க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் வாணியம்பாடியில்  உள்ள வேலூர் (மே) மாவட்ட செயலாளர் தேவராஜ் அலுவலகம் எதிராக  ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டத்தில் இருந்த தி.மு.க தொண்டர்கள் கந்தசாமி,  சார்லஸ் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர்  அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.  மேலும் மாவட்ட செயலாளர் தேவராஜ்  அச்சமயம்  அலுவலகத்தில் இல்லை என்று தெரிய வந்தது

    எனவே இது சம்பந்தமாக மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர்  அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று திமுக  நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று மற்ற தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai