Enable Javscript for better performance
தமிழகத்தில் 2016-ல் கூட்டணி ஆட்சி மலரும்: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் 2016-ல் கூட்டணி ஆட்சி மலரும்: விஜயகாந்த்

    By ஆர்.ஜெயபிரகாஷ்,  |   Published on : 15th April 2016 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayakanth

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழகத்தில் 2016-ல் கூட்டணி ஆட்சி மலரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.

    செய்யூரில் பஜார் வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியது:

     எங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மக்களின் வறுமையை பற்றி தெரியும், மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியும். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தபோது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். அன்று பேசிய விவரத்தை அவர் வெளிச்சம் தொலைக்காட்சி தொடக்க விழாவின்போது தெரிவித்தார். அப்போது அவர் பேசிய கூட்டணி ஆட்சி 2016-ல் மலரப்போகிறது.

     அதிமுகவில் முரட்டு பணம் உள்ளது. எங்களிடம் முரட்டு மணம் உள்ளது. விரோதிகளை கூட மன்னிக்கலாம். தூரோகிகளை மன்னிக்கக் கூடாது. அவர்களுக்கு நீங்கள் எப்போதும் வாக்களிக்கக் கூடாது. தமாகா எங்கள் கூட்டணியில் சேர்ந்த பிறகு பீட்டர் அல்போன்ஸ் அக் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் திமுகவுக்கு ஆதரவான நிலை கொண்டவர். காங்கிரஸýடன் கூட்டணி வைத்த திமுகவும் வெற்றி பெறாது, காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெறாது. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கிறார். 3 முறை வெற்றி பெற்ற ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வர நினைக்கிறார். ஆனால் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிதான் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

     இக் கூட்டத்தில மதுராந்தகம், உத்தரமேரூர் தேமுதிக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். இதேபோல் சோழிங்க நல்லூரிலும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். இப் பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai