Enable Javscript for better performance
திமுகவின் தேர்தல் அறிக்கை \\\'சூப்பர் ஹீரோ\\\': ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    
    stalin camp1

    மதுரை: 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்காக திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஹீரோ' என, மதுரையில் இன்று பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, தனது பிரசாரத்தை திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று தொடங்கினார்.

    மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற கூட்டத்தில் வேனில் இருந்தவாறே மதுரை கிழக்கு திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

    2016 ஆம் ஆண்டு தேர்தலுக்காக திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை 'சூப்பர் ஹீரோ'வாக உள்ளது.

    தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கப்பட்டதும் தமிழகத்தின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டும். மேலும், திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், அதிமுக ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றார் ஸ்டாலின்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai