Enable Javscript for better performance
திருவாரூரில் தினமணியின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி - Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் தினமணியின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

    By தங்கராஜூ  |   Published on : 15th April 2016 02:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் வெள்ளிக்கிழமை தினமணி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தினமணி மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கையெழுத்து இயக்கம், மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகிறது. அதன்படி திருவாரூரில் வெள்ளிக்கிழமை பேரணி மற்றும் இரு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி திருவாரூர் பழைய ரயில் நிலையத்திலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம். மதிவாணன் கொடியசைத்து தொடக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

    இதையடுத்து பழைய நாகப்பட்டினம் சாலையில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க பதாகையில் ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான இரா. முத்துமீனாட்சி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி செயலர் சுந்தர்ராஜ், தாசில்தார் ராஜன்பிரபு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. தனபால், உதவி அலுவலர்கள் கார்த்திகேயன், சத்திய மூர்த்தி, காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் மாணவர்கள், பொது மக்கள், வணிகர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கையெழுத்திட்டனர். 

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பேரணி பழைய நாகப்பட்டினம், நேதாஜி சாலை , அண்ணாசிலை, கீழவீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து கமலாலயக்குளம் அருகில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பதாகையில் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 500 பேர் மற்றும் சாலையில் சென்றோர் கையெழுத்திட்டனர்.

    பேரணியில் கண்ணியத்துடன் வாக்களிப்போம், நமது எதிர்காலத்தின் குரல் நமது வாக்கு, பெண்கள், இளைய தலைமுறையினர், அனைவரும் வாக்களிக்க பிரசாரம் செய்வோம், நாம் வாக்காளர் என்பதில் பெருமைபடுவோம், வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்து வோம், மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் வாக்களிப்பது, வாக்களிப்போம் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம், உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம், அதனை சாியாகப் பயன்படுத்துவீர், மதித்திடுவீர் ஜனநாயகத்தை, வாக்களித்திடுவீர், கையூட்டுப் பெற்று வாக்களிக்காமல், மனசாட்சிப்படி வாக்களியுங்கள் ஜனநாயகத்தை காத்திடுங்கள், ஓட்டுக்கு பணம் பெறுவது தண்டனைக்குரியது ஆகிய விழிப்புணர்வு கருத்துக்களை முழக்கமிட்டும், விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தியபடி சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai