Enable Javscript for better performance
தொகுதி ஓர் அறிமுகம்: துறைமுகம்- Dinamani

சுடச்சுட

    

    * தொகுதி பெயர்
     துறைமுகம்
    * தொகுதி வரிசை எண்
     18
    * சிறப்புகள்
     தமிழகத்தின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள துறைமுகம் தொகுதி ஒரு விஐபி தொகுதியாகும். இந்தத் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர்.
     இந்தத் தொகுதியில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை துறைமுகம், பாரிமுனை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் அமைந்துள்ளன. முக்கியமாக ஆங்கிலேயர்கள் துறைமுகத்தைக் கொண்டுதான் சென்னை என்ற நகரையே உருவாக்கினர். எனவே, இதனை அவர்கள் கருப்பர் நகரம் என்றும் அப்போது அழைத்துள்ளனர். இந்தத் தொகுதியில் மளிகைப் பொருள்கள், மின்னனு சாதனங்கள், மருத்துவப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், பட்டாசு, அழைப்பிதழ்கள், காலண்டர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் என அனைத்து வகை பொருள்களின் மொத்த விற்பனையே பிரதான தொழிலாக உள்ளது.
     இங்குள்ள காளிகாம்பாள், ஏகாம்பரேஸ்வரர், கந்தக்கோட்டம் கோயில்களும் பழமையான ஆர்மீனியன் தேவாலயம் பிரசித்தி பெற்றவை. இந்தத் தொகுதியில் இஸ்லாமியர்களும், வட இந்தியர்களும் கணிசமாக வசித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை குறைந்த அளவிலான வாக்காளர்கள் இந்தத் தொகுதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    * எல்லைகள்
     வடக்கே ராயபுரம் தொகுதி, தெற்கே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, மேற்கே திரு.வி.க.நகர் தொகுதி மற்றும் எழு ம்பூர் தொகுதி என துறைமுகம் தொகுதியின் எல்லைகள் அமைந்துள்ளன.
    * தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
     பெத்துநாயக்கன்பேட்டை (வார்டு எண் 43),
     பெருமாள் கோயில் கார்டன் (44), யானை கவுனி கேட் (48),
     எடப்பாளையம் (49), கொண்டித்தோப்பு (23),
     ஏழுகிணறு (24, 29), அம்மன் கோயில் (25),
     முத்தியால்பேட்டை (26), வள்ளல் சீதக்காதி நகர் (27),
     கச்சபேஸ்வரர் நகர் (28), சவுக்கார்பேட்டை (30),
     நேரு நகர் (80) ஆகிய மாநகராட்சி வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
    * வாக்காளர்கள்
     ஆண்கள் 96,017
     பெண்கள் 86,751
     திருநங்கைகள் 52
     மொத்தம் 1,82,820
    மொத்த வாக்குச்சாவடிகள் 157
    * இதுவரை தேர்தலில் வென்றவர்கள்
     1977 ஏ. செல்வராசன் திமுக
     1980 ஏ. செல்வராசன் திமுக
     1984 ஏ. செல்வராசன் திமுக
     1989 மு.கருணாநிதி திமுக
     1991 மு.கருணாநிதி திமுக
     1991 ஏ. செல்வராசன் திமுக(இடைத்தேர்தல்)
     1996 க.அன்பழகன் திமுக
     2001 க.அன்பழகன் திமுக
     2006 க.அன்பழகன் திமுக
     2011 பழ.கருப்பையா அதிமுக
    * தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
     என்.காளிதாஸ்,
     (கூடுதல் இயக்குநர், மருத்துவ மற்றும் கிராம சுகாதார இயக்குநரகம், சென்னை. செல்லிடப்பேசி: 94444 46559
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai