Enable Javscript for better performance
நடத்தை விதிகள் தெரியுமா?- Dinamani

சுடச்சுட

    

    வாடகை வாகனங்களைப் பயன்படுத்த...
     தேர்தல் பிரசாரத்தின் போது பிற அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால சாதனைகள்-பணி தொடர்பாக மட்டுமே விமர்சனங்கள் இருக்க வேண்டும்.
     தேர்தலின் போது தனிமனித உரிமை-அவர்களின் அமைதியான வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தேர்தல் கூட்டங்களில் ஒலி பெருக்கிகள் உள்பட இதர வசதிகளைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்.
     தேர்தல் கூட்டங்களில் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் அல்லது இடையூறு செய்யும் நபர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையின் உதவியைக் கோரலாம். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவல் முறையில் அல்லாத அடையாளச் சீட்டுகளில் அரசியல் கட்சியின் சின்னமோ அல்லது வேட்பாளரின் பெயரோ இருக்கக் கூடாது. தேர்தல் பிரசாரம்-வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாடகை வாகனங்களையும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு பயன்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தை தொடர்பான எந்தவொரு புகார் அல்லது பிரச்னையை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அல்லது தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai