Enable Javscript for better performance
நாம் தமிழர் கட்சி: 28 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

  

  நாம் தமிழர் கட்சி: 28 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

  By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் திருநங்கை உள்பட 28 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வியாழக்கிழமை இரவு வெளியிட்டார்.

   வரும் மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்தார்.

   இந்நிலையில் புதுச்சேரியிலும் ஏனாம், மாஹே நீங்கலாக மீதமுள்ள 28 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக விழா அண்ணா திடலில் வியாழக்கிழமை இரவு நடந்தது. 

   விழாவிற்கு புதுச்சேரி மாநில பொறுப்பாளர் தமிழன் மீரான் தலைமை தாங்கினார். கட்சித் தலைவர் சீமான் 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

  தொகுதிகள், பெயர்கள் விவரம்: இதன்படி உருளையன்பேட்டை தொகுதியில் ஜெஸ்லியா என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.

   காலாப்பட்டு -குமாரி, உப்பளம் -கலா சங்கரன், தட்டாஞ்சாவடி -த.கண்ணதாசன், பாகூர் -தமிழ்குமரன், முத்தியால்பேட்டை -தமிழன் மீரான், ராஜ்பவன் -இரா.வேலாயுதம், காமராஜர் நகர் -சிவக்குமார், மணவெளி -பாண்டுரங்கன், அரியாங்குப்பம் -சத்தியானந்தம், முதலியார்பேட்டை -அரிதாஸ், வில்லியனூர் -டேவிட் சுரேஷ், மங்கலம் -பாக்கியராஜ், நெட்டப்பாக்கம் -வீரமுத்து, மண்ணாடிப்பட்டு -கணபதி, திருபுவனை -பானுபிரியா, இந்திரா நகர் -செல்வராஜ், உழவர்கரை -சார்லஸ், கதிர்காமம் -ரமேஷ், லாஸ்பேட்டை -மணிபாரதி, ஏம்பலம் -சாண்டில்யன், ஊசுடு -சசிக்குமார், நெல்லித்தோப்பு -ராமராசன்.

  காரைக்கால் மாவட்டம்: காரைக்கால் தெற்கு -மரி அந்துவான், திருநள்ளார் -ர.கோ.சீதாபதி, நெடுங்காடு -மு.தனபால், காரைக்கால் வடக்கு -மு.சிக்கந்தர் பாட்சா, நிரவி திருப்பட்டினம் -த.சுகந்து.

  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரியில் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதிமுக, திமுக கட்சிகள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தற்போது இரு கட்சிகளும் மதுவிலக்கைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

  புதுச்சேரியிலும் முதல்வர் ரங்கசாமி அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

  புதுவையில் 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். ஏனாம் பிராந்தியத்தை ஆந்திரத்தோடும், மாஹே பிராந்தியத்தை கேரளத்தோடும் இணைத்து விட வேண்டும். தலா ஒரு தொகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு அங்கு வெற்றி பெறுவோர் மொத்த வளங்களையும் தங்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். அதனால் தான் இரு பிராந்தியங்களையும் அவை இருக்கும் மாநிலங்களோடு இணைத்து விட வேண்டும்.

  தமிழகம், புதுவையில் காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வோம். புதுச்சேரியில் எதிர்காலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கு மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம்.

  மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தமிழகம், புதுவையில் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்படைவர். அத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடலூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது என்றார் சீமான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai